நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை இருளர் நகரை சேர்ந்தவர் ராஜி, 60; இவரது, மனைவி வசந்தா, 55; இருவரும் அகரம் ரயிலடி பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வந்தனர்.
ராஜி, தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், வசந்தா கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜி, குடித்துவிட்டு வந்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த ராஜி, துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதுகுறித்து, வசந்தா கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.

