ADDED : அக் 29, 2026 11:09 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கூலித் தொழிலாளி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலுார், உண்ணாமலை செட்டிச்சாவடியைச் சேர்ந்தவர் சண்முகராஜ் 34; கூலித் தொழிலாளி. மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்ட இவர், விரக்தியில் இன்று (அக்.,29) காலை வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடன், குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தார்.
கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
