UPDATED : ஆக 10, 2026 08:44 PM
ADDED : ஆக 10, 2026 08:40 PM
வடலுார்;ஏரியில் தொழிலாளி சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
வடலுார் , அய்யன் ஏரியில் காலை நபர் ஒருவர் விழுந்தார். தகவல் அறிந்த வடலுார் போலீசார் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி போலீசார் விசாரித்தனர். அதில் இறந்தவர் குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடூர் அகரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் சங்கரலிங்கம், 48, என தெரிய வந்தது.
இவருக்கு மேகலா என்ற மனைவியும், 1 மகன் மற்றும், மகள் உள்ளனர். கட்டட சித்தாள் வேலை செய்து வந்த இவர், குறிஞ்சிப்பாடியில் உள்ள தனது தந்தை வீட்டிலும், வடலுார் சபை பகுதிகளும் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அதிக குடிப்பழக்கம் காரணமாக இவர் ஏரியில் விழுந்து, அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
