ADDED : ஏப் 16, 2025 06:13 AM
அ நிறம் | அளவு
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அடுத்த, வடக்கனந்தலை சேர்ந்தவர் ராமசாமி மகன் அருணாசலம், 56; விவசாய கூலித்தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்.
இவர் நேற்று முன்தினம் காலை, அம்மாபேட்டை, டாஸ்மாக்கில் நண்பர்களுடன் மது குடிக்க சென்றார். தொடர்ந்து, மாலையில் அதே பகுதி வயல்வெளி அருகில் இறந்து கிடந்தார்.
கச்சிராயபாளையம் போலீசார் அவரது உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
