ADDED : நவ 24, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
கடலுார்: தொழிலாளி உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார், சின்ன கங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம்,43; தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய அவர், நேற்று (நவ.,23) சின்ன கங்கணாங்குப்பம் பேட்டரி கடை அருகில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
