ADDED : மே 07, 2025 01:20 AM

அ நிறம் | அளவு
கடலுார் : தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் கடலுார் மஞ்சக்குப்பத்தில் நடந்தது.
மாநில துணை செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் மணிவேல் முன்னிலை வகித்தார். கிளை தலைவர் கோவிந்தன் வரவேற்றார்.
மாநில பொது செயலாளர் பாலு, மாநில பொருளாளர் ஜெயின் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். கடலுார் புதிய பஸ் நிலையத்தை எம்.புதுாரில் அமைக்காமல் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடைகளை பெற்றோர் மூலம் தைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும். தையல் கலைஞர்கள் தனி நல வாரியத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
