/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பணியாளர்களுக்கு சிதம்பரத்தில் பயிலரங்கம்
/
அரசு பணியாளர்களுக்கு சிதம்பரத்தில் பயிலரங்கம்
ADDED : நவ 12, 2024 08:13 PM
கடலுார்; தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்படும் ஆட்சி மொழித்திட்ட செயலாக்கம் குறித்த பயிரங்கத்தில் அரசு துறை பணியாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கம் முழுமையாக செயல்படுத்த அரச துறைகளின் அலுவலர், பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம், ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
கடலுார் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டிற்கான ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் வரும் 14, 15ம் தேதிகளில் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழியல் துறையில் நடக்கிறது.
கருத்தரங்கத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு துறை, வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகிய நிலையில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும், 15ம் தேதி மதியம் 3:30 மணிக்கு கருத்தரங்கில் கலெக்டர் தலைமை தாங்கி, ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய அலுவலகத்திற்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார்.
தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் நடத்தப்பெறும் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கத்தில் அரசுத் துறை அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என, கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

