/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உளுந்தாம்பட்டு பள்ளியில் உலக மரபு வார விழா
/
உளுந்தாம்பட்டு பள்ளியில் உலக மரபு வார விழா
ADDED : டிச 01, 2024 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் எழுமலை தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பாரதி ஷீலாபாய், தாரகேஸ்வரி, அருள் முன்னிலை வகித்தனர். தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், தென்பெண்ணை ஆற்றில் கண்டறிந்த தொல்லியல் பொருட்கள் பற்றிய விளக்கத்தையும், ஆற்றங்கரை நாகரீகம் பற்றியும் மாணவர்களிடம் விளக்கி தொல்லியல் கண்காட்சி நடத்தினார். தலைமையாசிரியர் ஏழுமலை வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.

