ADDED : ஏப் 13, 2026 11:28 PM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: கீரப்பாளையம் மெய்ஞான அறக்கட்டளை மற்றும் ஆயுஷ்கேர் சார்பில் உலக ஹோமியோபதி தின விழா நடந்தது.
மெய்ஞான அறக்கட்டளை நிறுவன தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கி துவக்க உரையாற்றினார். துணைத் தலைவர் சுதாகர் வரவேற்றார். பொதுச்செயலாளர் ஜெயஜோதி பிரகாஷா முன்னிலை வகித்தார். புதுச்சேரி மருத்துவர் திருமேனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஹோமியோபதி மருத்துவம் குறித்து விளக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் டாக்டர்கள் குபேரன், அக்க்ஷயா, சாய் மணிமொழி, எம்.அக்க்ஷயா மற்றும் பலர் பங்கேற்றனர். இளவரசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஹோமியோபதி மருத்துவம் குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி, பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
