
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்: வேப்பூர் அடுத்த என்.நாரையூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக இயற்கை தின விழா நடந்தது.
பள்ளி தாளாளர் கதிரவன் தலைமை தாங்கி, இயற்கை வளங்களின் நன்மைகள் குறித்து பேசினார். முதல்வர் செந்தில்குமார், நிர்வாக அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். அறிவியல் ஆசிரியர் சாமிநாதன் வரவேற்றார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், இயற்கை வளங்கள், அதன் நன்மைகள் குறித்த கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.