/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உலக முந்திரி தின விழாவில் உலக சாதனை நிகழ்ச்சி
/
உலக முந்திரி தின விழாவில் உலக சாதனை நிகழ்ச்சி
ADDED : நவ 26, 2024 06:57 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில், உலக முந்திரி தின விழாவையொட்டி, முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் 150 ட்ரோன் மூலம் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.
சங்க தலைவர் மலர்வாசகம் வரவேற்றார். செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி முன்னிலை வகித்தனர். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல், ஏற்றுமதி நிறுவன உதவி இயக்குனர் ஷோபனாகுமார், துணை இயக்குனர் பூங்கோதை, தொழில் வர்த்தக சங்க மண்டல தலைவர் சண்முகம் ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர்.
விழாவில் 100 விவசாயிகளுக்குங ஒட்டுரக முந்திரி கன்றுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பின் 150 ட்ரோன் கேமரா மூலம் 13 நிமிடம் தொடர்ந்து வானில் பரந்தவாறு உலக முந்திரி தினம் குறித்து சிறப்பு உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.
பின் 150 ட்ரோன் மூலம் பெரிய முந்திரி பழம், முந்திரி பயிர் பெரிய அளவில் வரைந்து உலக சாதனை வழங்கியதற்கான விருக்ஷ்யூ புக் ஆப் தீர்ப்பாளர் சங்கரி உலக சாதனை விருது வழங்கினர்.
நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் ராஜேந்திரன், தொழில் வர்த்தக சங்க செயலாளர் வீரப்பன், முந்திரி ஏற்றுமதியாளர்கள் ஜெயா கேஷ்யூஸ் ஜெயமூர்த்தி, மலர் இண்டர்நேஷனல் எழில், பகவதிகேஷ்யூஸ் மதன்சந்த், நிஷா டிரேடர்ஸ் பாரதிதாசன், சங்கர்,ரீகல்பார்ம் சதீஷ், எஸ்.வி.ஆர்.ராஜேஷ், ஆறுமுகம், சக்கரவர்த்தி, கீழக்குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் பாலகிருஷ்ணன், ரத்தனா மெட்ரிக் பள்ளி முதல்வர் ரவி, முந்திரி ஏற்றுமதியாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.