ADDED : மார் 02, 2024 06:09 AM
அ நிறம் | அளவு
கடலுார் : ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் பி.எஸ்., ஸ்மார்ட் கல்வி மையம் இணைந்து உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு வடலுார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மைய ஆலோசகர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் தலைமை தாங்கினார். செயல் மேலாளர் ஸ்டாலின், கிளை மேலாளர் அன்பானந்தம், திட்ட மேலாளர் சரவணகுமார், மேலாளர் மணிபாலன், இளையராஜா முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
