/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பூஜை
/
கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பூஜை
ADDED : ஜூலை 10, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் நடந்த பவுர்ணமி பூஜையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமியொட்டி நேற்று காலை அபி ேஷக ஆராதனை, தீபாராதனை, நடந்தது. இரவு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இதேப் போன்று, விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவர் சுவாமி, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

