தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெருமாள் கோவில்களில் வழிபாடு 

பெருமாள் கோவில்களில் வழிபாடு 

பெருமாள் கோவில்களில் வழிபாடு 


ADDED : செப் 26, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி நேற்று காலை, 3:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின், சிறப்பு பூஜைகள் முடிந்து 4:00 மணி்க்கு நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 

மூலவர் தேவநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ‘கோவிந்தா.. கோவிந்தா’ என கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். 2,500த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போன்று, புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜப் பெருமாள் ஆகிய கோவில்களிலும் புரட்டாசி சிறப்பு வழிபாடு நடந்தது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us