/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவந்திபுரம் கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்
/
திருவந்திபுரம் கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்
ADDED : ஜன 30, 2025 12:23 AM

கடலுார்: திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று யாகசாலை பூஜை துவங்கியது.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2012ம் ஆண்டு நடந்தது. தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், 2023ல் திருப்பணிகள் துவங்கியது. பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் வரும் பிப்., 2ம் தேதி காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் நடக்கிறது.
அதையொட்டி, நேற்று மாலை யாகசாலை பூஜை துவங்கியது. பிப்., 2ம் தேதி காலை விஸ்வரூப தரிசனம், ஹோமம், பிரதான மகா பூர்ணாஹூதி நடக்கிறது. தொடர்ந்து, கும்பம் புறப்பாடாகி ஊர்வலமாக சென்று கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு தேவநாத சுவாமி உபய நாச்சியாருடன் வீதியுலா நடக்கிறது.