/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயில கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
/
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயில கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயில கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயில கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 18, 2024 06:55 AM
கடலுார் ; மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் இன மாணவ, மாணவியர்களுக்கு 2024--2025ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm//scholarship schemes என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், கலெக்டர் அலுவலகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.