/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 10 நாணயங்களை வாங்க மறுத்தால் புகார் செய்யலாம்
/
ரூ. 10 நாணயங்களை வாங்க மறுத்தால் புகார் செய்யலாம்
ADDED : டிச 21, 2024 02:33 AM
கடலுார்: பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கு புகார் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் 10 ரூபாய் நாணயங்கள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வங்கி மேலாளர்கள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்துக் கழகம், நுகர்வோர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் சில வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை ஏற்க மறுப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு புகார்கள் வந்துள்ளது.
மத்திய அரசின் கீழுள்ள நாணய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் நாணயங்களை, இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது.
நாணயங்கள் பொருளாதார, சமூக மற்றும் கலாசார மதிப்புகளின் பல்வேறு கருப்பொருட்களை பிரதிபலிக்கும் அம்சங்களை கொண்டுள்ளன.
மேலும், புதிய நாணயங்கள் மத்திய அரசால் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்த நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். நாணயங்களை அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றுக்கொள்ளலாம்.
எவரேனும், நாணயங்களை வாங்க மறுத்தால் கடலுார் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

