நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநத்தம் : ராமநத்தம் அருகே குடும்ப பிரச்னையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரம்பலுார் மாவட்டம், தொண்டமாந்துறையைச் சேர்ந்தவர் வினோத். இவர், தனது குடும்பத்துடன் தொழுதுாரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வினோத் குடித்து விட்டு தினமும் வீட்டிற்கு வந்ததை மனைவி திவ்யா தட்டிக் கேட்பதால் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மீண்டும் குடிபோதையில் வந்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்று காலை வினோத் வேலைக்கு சென்றவுடன், திவ்யா துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

