ADDED : ஏப் 11, 2026 11:18 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: பூச்சிமருந்து குடித்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விருத்தாசலம் கம்பர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் மகள் ரேவதி, 18; தந்தை இறந்த நிலையில், தாய் மற்றும் மூன்று சகோதரிகளுடன் வசித்து வந்தார். கடந்த 7ம் தேதி பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது தாய் ராஜேஸ்வரி புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பிரதாப்சந்திரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றார்.
