ADDED : ஆக 21, 2026 10:15 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: முன்னாள் காதலியை செல்போனில் மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்தவர் ஜோனாதன் மார்க், 34. இவர் விருத்தாசலத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவருடன் சேர்ந்து நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜோனாதன் மார்க்கிற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.
இதன்காரணமாக, அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அந்த பெண்ணை செல்போனில் அழைத்த ஜோனார்தன், தங்களுக்குள் இருந்த காதல் விவகாரம் குறித்து கணவரிடம் கூறிவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ஜோனர்தன் மார்கை கைது செய்தனர்.
