ADDED : மே 22, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து சென்றனர்.
பெரியகண்டிங்குப்பத்தில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது, ஒன்றரை கிலோ எடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அங்கிருந்து குட்கா பொருட்கள், ரூ.3,750 ரொக்கம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளர் வேல்முருகன், 30; என்பவரை கைது செய்தனர்.
