/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் சி.சி.டி.வி., கேமரா சேதப்படுத்திய வாலிபர் கைது
/
கோவில் சி.சி.டி.வி., கேமரா சேதப்படுத்திய வாலிபர் கைது
கோவில் சி.சி.டி.வி., கேமரா சேதப்படுத்திய வாலிபர் கைது
கோவில் சி.சி.டி.வி., கேமரா சேதப்படுத்திய வாலிபர் கைது
ADDED : நவ 03, 2024 05:30 AM
மந்தாரக்குப்பம்: ஊமங்கலம் அடுத்த கோட்டரி சிவன் கோவிலில் உள்ள சி.சி.டி.வி., கேமரா சேதப்படுத்திய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊமங்கலம் அடுத்த கோட்டேரி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் புகுந்து அங்குள்ள சி.சி.டி.வி., கேமராக்களை சேதப்படுத்தி சென்றனர். இது தொடர்பாக கோவில் பூசாரி ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பது தெரிய வந்தது. அதையடுத்து, ராஜா, 35 மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.