ADDED : மார் 15, 2026 04:40 AM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: பிளாஸ்டிக் பைப்பால் துப்பாக்கி தயாரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பெரியநெல்லிக்கொல்லை, காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த தாஸ் மகன் பாலகுரு, 28; இவர் யூ-டியூப் பார்த்து, அணில் பிடிக்க, பிளாஸ்டிக் துப்பாக்கி செய்து பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பிளாஸ்டிக் பைப் துப்பாக்கி செய்தவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிந்து பாலகுருவை கைது செய்து பிளாஸ்டிக் பைப் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
