தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண் மானபங்கம் வாலிபர் கைது

பெண் மானபங்கம் வாலிபர் கைது

பெண் மானபங்கம் வாலிபர் கைது


ADDED : ஏப் 21, 2025 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : பெண்ணை மானபங்கப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த சின்னஇருசாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனேசன் மனைவி ஜெயலட்சுமி,35; . இவர் புதுச்சேரியில் தனியார் மெட்டல் கம்பெனியில் வேலை செய்கிறார். கடந்த 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

சின்ன இருசாம்பாளையம் அருகே சென்ற போது, புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த கோகுல்,19; என்பவர் ஜெயலட்சுமியை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தார்.

இதற்கு ஜெயலட்சுமி எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை ஆபாசமாக திட்டி மானபங்கப்படுத்தினார். புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து கோகுலை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us