/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது
/
பெண்ணை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது
ADDED : ஜன 19, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: கிள்ளையில், பெண்ணை பற்றி சமூக வலை தளத்தில் ஆபாச வார்த்தைகளால் பதிவிட்ட வாலிபரை போலீசார்கைது செய்தனர்.
கிள்ளை வைத்தியர் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், 35; இவர், கொடுக்கல் வாங்கல் பிரச்னை காரணமாக, அப்பகுதி பெண் ஒருவரை பற்றி ஆபாசமான வார்த்தைகளால், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தட்டிகேட்ட பெண்ணின் குடும்பத்தாரை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரில், கிள்ளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்கு பதிந்து, ராஜசேகரை கைது செய்தார்.