ADDED : மே 15, 2026 04:01 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் பணிபூண்டார் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அருணா, 43; இவருக்கு சொந்தமான வீட்டில் கணேசன் மகன் செல்வம், 29; என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
மூன்று மாதங்களாக வீட்டு வாடகை தராதது குறித்து அருணா கேட்டபோது, ஆத்திரமடைந்த அவர், மர ரீப்பரால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
அதில், படுகாயமடைந்த அருணாவுக்கு தலையில், 12 தையல்கள் போடப்பட்டன. இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்தனர்.
