/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 2 லட்சம் மோசடி விருதை வாலிபர் கைது
/
ரூ. 2 லட்சம் மோசடி விருதை வாலிபர் கைது
ADDED : மே 25, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக, பணம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் புகழேந்திராஜா,30; இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, குள்ளஞ்சாவடி, கரைமேடு அடுத்த கோதண்டராமபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசுதன், 37; என்பவரிடம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2 லட்சம் ரூபாய் பெற்றார்.
ஆனால், இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தார்.
இதுகுறித்து சிவசுதன் கடந்த 19ம் தேதி விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து புகழேந்திராஜாவை நேற்று கைது செய்தனர்.