ADDED : ஆக 12, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்,: கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
காட்டுமன்னார்கோவில் போலீசார் ச ம்பந்தப்பட்ட பள்ளியின் வளாகத்தில் மப்டியில் கண்காணித்தனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில், சட்டை பையில் சிறிய பொட்டலங்களாக 200 கிராம் கஞ்சா மறைத்து வைத்தி ருந்தது தெரியவந்தது.
அந்த வாலிபர் காட்டுமன்னார்கோவில் பஜனை மடத்தெருவை சேர்ந்த ஆகாஷ், 25; என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.