ADDED : செப் 27, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்த மேலணிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கண்ணு மகன் பாலாஜி 28; ஐ.டி.ஐ., படித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் காட்டுமன்னார்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காட்டு மன்னார்கோவில் சப் இன்ஸ் பெக்டர் அப்துல் சையத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கஞ்சா விற்பனை செய்த பாலாஜியை கைது செய்தனர்.