ADDED : செப் 29, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்,: பெண்ணாடம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக, தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சந்தேகத்தின்பேரில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
இதில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராசு மகன் சின்னராசு, 25; என்பதும், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து சின்னராசுவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.