ADDED : ஜன 04, 2024 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அருகே மோட்டார் பைக் திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அம்மாபேட்டை பகுதியில், அண்ணாமலை நகர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சிதம்பரம் அடுத்த கீழமூங்கிலடி. தையாக்குப்பம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பிரபாகரன், 35; என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் பைக், அம்மாபேட்டையை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
அந்த மோட்டார் பைக்கை திருடியதை பிரபாகரன் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து, அண்ணாமலை நகர் போலீசார், திருடப்பட்ட மோட்டார் பைக்கை பறிமுதல் செய்து, பிரபாகரனை கைது செய்தனர்.