ADDED : ஆக 22, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பெண்ணின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிடுவதாக மிரட்டிய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி அடுத்த வடதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தவேல் மகன் சுந்தரவேல், 19; இவர், திருமணமான 23 வயது பெண்ணிடம், தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிடுவ தாக கூறி மிரட்டல் விடுத்தார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சுந்தரவேலை கைது செய்தனர்.