/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது
/
உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது
ADDED : டிச 08, 2024 05:25 AM

பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து, தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம், தெற்கு தெருவில் பிள்ளையார் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, கோவிலுக்குள் மர்ம நபர்கள் 3 பேர் உண்டியலை உடைப்பது தெரிந்தது.
உடன், அவர்களைப் பிடிக்க முயன்றபோது, ஒருவர் மட்டும் சிக்கினர். 2 பேர் தப்பியோடினர். சிக்கிய நபரை பெண்ணாடம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பெண்ணாடம், சோழன் நகர் ஞானபிரகாசம் மகன் சந்தோஷ்குமார், 20; என தெரிந்தது. உடன் போலீசார் வழக்குப்பதிந்து சந்தோஷ்குமாரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.