/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணிடம் நகை பறிப்பு சிதம்பரத்தில் வாலிபர் கைது
/
பெண்ணிடம் நகை பறிப்பு சிதம்பரத்தில் வாலிபர் கைது
ADDED : நவ 10, 2024 06:19 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணின் முகத்தில், ஸ்பிரே அடித்து, செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் கனகசபை நகரைச்சேர்ந்தவர்வேலவன் மனைவி விஜயவாணி, 57; அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர். இவர், கடந்த 7ம் தேதி, மாலை பணி முடிந்து, வீட்டிற்கு சென்றார்.
வீட்டு மாடிக்கு சென்ற அவரை பின்தொடர்ந்து ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர், விஜயவாணியின் முகத்தில் ஸ்பிரே அடித்து, அவர் அணிந்திருந்த இரண்டரை சவரன் செயினை பறித்துச் சென்றார்.
இது குறித்து விஜயாராணி கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில், இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது,சிதம்பரம் மேலவீதி, பைசல் டவர் பகுதியைச் சேர்ந்த கவுஸ் மொய்தின் மகன் அசதுல்லா உசேன், 35; என்பது தெரிய வந்தது.
உடன் அவரை கைது செய்து, நகை மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.