/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
105 கிலோ குட்கா பதுக்கல் வடலுாரில் வாலிபர் கைது
/
105 கிலோ குட்கா பதுக்கல் வடலுாரில் வாலிபர் கைது
ADDED : ஜன 19, 2025 06:29 AM

கடலுார்: வடலுாரில், 105 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த பொறியியல் பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வடலுார் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் நேற்று மதியம், கடலுார் சாலையில் உள்ள அய்யன் ஏரி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே ஸ்கூட்டியில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் வடலுார் ஞானப்பிரகாசம் தெருவை சேர்ந்த வின்சென்ட் மகன் விக்னேஷ்,27, முதுகலை பொறியியல் பட்டதாரி என தெரிந்தது. அவருடைய வீட்டில் சோதனை மேற்கொண்டதில் 7 மூட்டைகளில் 105 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 2.50 லட்சமாகும்.
இதுகுறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விக்னேைஷ கைது செய்தனர்.