/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
UPDATED : ஜன 03, 2026 09:04 AM
ADDED : ஜன 03, 2026 05:11 AM

கடலுார்: சிதம்பரம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் கைது செய்யப்பட்ட வாலிபரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்தவர் முகமதுஅபுபக்கர் மகன் இப்ராகிம்,24. இவர் சிதம்பரம் அருகே 17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, இப்ராகிமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், இப்ராகிமை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் இப்ராகிம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.