ADDED : ஏப் 09, 2026 10:06 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் போலீஸ் ஏட்டு ஆதிகேசவன் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், பாலக்கரை ரவுண்டானாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட மூவர், அவ்வழியே சென்ற பஸ்கள் மீது கல்வீச முயன்றனர்.
அவர்களை தடுத்த ஆதிகேசவனை, மூவரும் கீழே தள்ளி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். அதில், ஒருவரை மடக்கிப் பிடிக்க, மற்றவர்கள் தப்பியோடினர். விசாரணையில், அவர், ஜெயில் தெரு, பாலசுப்ரமணியன் தெரு இளையராஜா, 19, என தெரிந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். தப்பிய இருவரை தேடி வருகின்றனர்.
