UPDATED : அக் 12, 2026 09:21 PM
ADDED : அக் 12, 2026 08:56 PM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: இடப் பிரச்னையில், தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். .
மந்தாரக்குப்பம் அடுத்த ரோமபுரியை சேர்ந்தவர் ஜோஸ்மினாமேரி,39; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராகுல்ராஜ் என்பவருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் ஜோஸ்மினாமேரி மற்றும் அவரது கணவர், மகன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ரோமாபுரி பாலம் அருகே பைக்கில் சென்றவர்களை, ராகுல்ராஜ் வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து ராகுல்ராஜை 29, கைது செய்தனர்.
