தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது


ADDED : நவ 28, 2026 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 10:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: முன்விரோதத்தில் கூலித்தொழிலாளியை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து ஒருவரை கைது செய்தனர்.

பெண்ணாடம் அடுத்த இறையூரை சேர்ந்தவர்கள் அசோக், 38; ரவி மகன் அஜித், 28; இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், அசோக் நேற்று (நவ.,27) இரவு பெண்ணாடத்தில் உள்ள தனியார் பார் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த அஜித், 28; அவரது நண்பர்கள் மணிமாறன், மாதையன் ஆகியோர் அசோக்கை முன்விரோதம் காரணமாக தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் அஜித் உட்பட மூவர் மீது வழக்குப் பதிந்து அஜித்தை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அஜித், அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவரது குடும்பத்தினரை கத்தியால் வெட்டிய தகராறில், பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us