ADDED : அக் 08, 2024 02:54 AM

கடலுார்: கடலுார் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கடலுாரில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார். இளைஞர் காங்., துணைத் தலைவர் வேலு வரவேற்றார்.
மாநில தலைவர் லெனின் பிரசாத், வழக்கறிஞர் சந்திரசேகர் பங்கேற்றனர்.
மாவட்ட துணைத் தலைவர்கள் கோபிநாத், ரஞ்சித், குறிஞ்சிப்பாடி தலைவர் கலைச்செல்வன், ராஜராஜன், பிரவீன், வெங்கடேஷ், செல்வா, ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் உள்ளாட்சி, சட்டசபை தேர்தலில் இளைஞர் காங்., கட்சிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கட்சியிடம் வலியுறுத்துவது. பருவமழை துவங்கும் முன் நீர்நிலைகளை துார் வார வேண்டும்.
கடலுார் துறைமுகத்தில் விரைவில் கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.