/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தடுப்பு கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி
/
தடுப்பு கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி
ADDED : ஜன 14, 2025 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அருகே தடுப்பு கட்டையில் பைக் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புவனகிரி அடுத்த ஜெயங் கொண்டான் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வசந்தவேல், 24. கத்தாரில் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 12 ம் தேதி தமது நண்பரை பார்க்க குறிஞ்சிப்பாடி-நடுவீரப்பட்டு சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அதிவேகமாக வந்த வசந்தவேல் நடுவீரப்பட்டு அடுத்த நரியங்குப்பம் அருகே வரும் போது எதிர்பாராத விதமாக பைக் கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு கட்டையில் மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே வசந்தவேல் இறந்தார்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.