தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

 ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

 ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி


ADDED : ஏப் 27, 2026 09:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 09:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: பெயிண்டர் வேலைக்கு சென்ற வாலிபர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மேடவாக்கம் ஜலடியாள்பேட்டையை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சரவணன், 31; பெயிண்டர். ஏப்ரல் 26 ஆம் தேதி சென்னை - திருநல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தனது நண்பர்களுடன் பெயிண்டர் வேலைக்கு திருநல்வேலி சென்றார். ரயிலின் முன்பக்கம் உள்ள பொது பெட்டியில் பயணம் செய்த சரணவன், திருவெண்ணெய்நல்லுார் அருகே ரயில் இருந்து தவறி விழுந்தார்.

இதில், படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார், சரவணன் உடலை கைப்பற்றி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us