தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி 

ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி 

ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி 


ADDED : செப் 16, 2026 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம், செப். 17–

பெண்ணாடம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் – திருச்சி ரயில் பாதையில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 10:30 மணியளவில் 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயில் பாதையொட்டி, இறந்து கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

இறந்தவரின், சட்டை பையில் சென்னையில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் காரைக்குடி செல்ல 2 நபர் உள்ள டிக்கெட் இருப்பது தெரிந்தது. உடன் வந்த மற்றொருவர் யார் என விசாரிக்கின்றனர். இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us