ADDED : ஜன 09, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கோழியூரில் இருந்து அரசு கல்லுாரி செல்லும் சாலையோர பாசன வாய்க்காலில் நேற்று கா லை 8:00 மணியளவில் 36 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலறிந்து வந்த திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்தனர். அதில், அவர் செவ்வேரியைச் சேர்ந்த அருள்முருகன், 36; என தெரியவந்தது. இதுகுறி த்து புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
