ADDED : டிச 19, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்துார் ஊராட்சியைச் சேர்ந்த ஜான் என்பவரின் மகன் மார்ட்டின், 22; இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் விழுப்புரத்திலிருந்து கண்டாச்சிபுரம் நோக்கி பைக்கில் வந்துகொண்டிருந்தார்.
கண்டாச்சிபுரம் பாலத்தின் அருகில் வந்தபோது எதிரில் வந்த ஆட்டோ மோதியதில் மார்ட்டின் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
.இதுகுறித்து புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் ஆட்டோ டிரைவர் சண்முகம், 47; என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

