ADDED : டிச 15, 2024 08:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த நடுசாத்திப்பட்டு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் யோவன் அம்ப்ரோஸ், 31; தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார்.கடந்த 2 ஆண்டுக்கு முன் திருமணமாகி ஜெர்சி என்ற மனைவியும், 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10:30 மணியளவில் வீட்டில் இருந்த யோவன்அம்ப்ரோஸ், மழையில் நனைந்திருந்த சுவிட்சு போர்டில் லைட் சுவிட்ச் போட்டார். அப்போது மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டார். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் யோவன்அம்ப்ரோஸ் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு போய்சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே, யோவன் அம்ப்ரோஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.