/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரம் உப்பனாற்றில் படகு போட்டி இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
/
பிச்சாவரம் உப்பனாற்றில் படகு போட்டி இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
பிச்சாவரம் உப்பனாற்றில் படகு போட்டி இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
பிச்சாவரம் உப்பனாற்றில் படகு போட்டி இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
ADDED : ஜன 17, 2025 06:19 AM

கிள்ளை: காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று பிச்சாவரம் உப்பனாற்றில் நடந்த படகுப்போட்டியில், இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று கிள்ளை கிராமம் சார்பில், பிச்சாவரம் உப்பனாற்றில் ஆண்டுதோறும் படகுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, படகுப்போட்டி நேற்று நடந்தது.
கிராம தலைவர் சுரேந்திரன் தலைமை தாங்கி, படகுப்போட்டியை துவக்கி வைத்தார். பில்லுமேடு கிராம தலைவர் வேலாயதம், சின்னவாய்க்கால் கிராம தலைவர் செழியன், பட்டரையடி கிராம தலைவர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை, பந்தளராஜன் தொகுத்து வழங்கினார். படகுபோட்டியில், கிள்ளை, பில்லுமேடு, பட்டரையடி, சின்னவாய்க்கால் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
படகில், மூன்று பேர் துடுப்பு பயன்படுத்தும் போட்டி, இரண்டு பேர் துடுப்பு பயன்படும் போட்டி, ஒருவர் துடுப்பு பயன்படுத்தும் போட்டி நடத்தப்பட்டு வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு காளியம்மன் கோவில் திடலில் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் நீதிமணி, கிராம நிர்வாகிகள் செங்குட்டுவன், செல்வமணி, செந்தில்குமார் வீரத்தமிழன், வீரசேகர், குட்டியாண்டிசாமி, சங்கர், ஜவகர், கலையரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.