/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இளவட்ட கல் துாக்கும் போட்டி: கடலுாரில் இளைஞர்கள் ஆர்வம்
/
இளவட்ட கல் துாக்கும் போட்டி: கடலுாரில் இளைஞர்கள் ஆர்வம்
இளவட்ட கல் துாக்கும் போட்டி: கடலுாரில் இளைஞர்கள் ஆர்வம்
இளவட்ட கல் துாக்கும் போட்டி: கடலுாரில் இளைஞர்கள் ஆர்வம்
ADDED : ஜன 19, 2025 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அடுத்த வெளிச் செம்மண்டலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி இளவட்டக்கல் துாக்கும் போட்டிநடந்தது.
காணும் பொங்கலை யொட்டி, கடலுார் வெளிச்செம்மண்டலம் பகுதியில் உறியடித்தல், கயிறு இழுத்தல், இளவட்டக்கல் துாக்குதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது.
அதில் இளவட்டக்கல் துாக்கும் போட்டியில் இளைஞர்கள், பெரியவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 50 கிலோ மற்றும் 98 கிலோ எடையுள்ள இளவட்டக்கல் போட்டிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அதில் 50 கிலோ எடைக்கல்லை போட்டியில் பங்கேற்ற பலர் அலேக்காக துாக்கி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.