ADDED : ஏப் 12, 2025 10:05 PM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி அடுத்த பாச்சாரப்பாளையம், வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் நவீன்,25; இவர், பிளஸ் 2 முடித்துவிட்டு சிங்கப்பூரில் வேலைக்கு சென்றார். ஒரு வாரம் மட்டுமே வேலை செய்த அவர் வேலை பிடிக்காததால் சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இதனை முருகன் கண்டித்தார். மனமுடைந்த நவீன் நேற்று முன்தினம் வயலில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
