நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வயிற்றுவலி தாங்காமல், வாலிபர் தற்கொலை செய்து கொண்டது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் முதுநகர், வ.உ.சி.,நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் ஷாம்,35; திருமணமாகாதவர். கல்லுாரி படிப்பை முடித்துவிட்டு, ஆன்லைனில் உடற்பயிற்சி வகுப்பு எடுத்து வந்தார்.
இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்ததால், சிகிச்சை பெற்று வந்தார். நேற்றுமுன்தினம் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டு, வலி அதிகமானதால் பூச்சிமருந்தை குடித்தார். உறவின ர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச் சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

